×

பயிரில் மகசூல் அதிகரிக்க பசுந்தாள் உரமிட வேண்டும்

 

தேன்கனிக்கோட்டை, ஏப்.29: மண் வளத்தை பாதுகாக்கவும், மகசூல் அதிகரிக்கவும் விளை நிலத்தில் பசுந்தாள் உரமிட வேண்டுமென, கெலமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜான் லூர்து சேவியர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் அதிக மகசூல் பெற, பல்வேறு ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளுடன் சேர்த்து களைக்கொல்லிகளையும் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றை இடும்போது, மண்ணின் இயற்பியல் தன்மை மற்றும் நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் அளவு குறைந்து விடுகிறது. எனவே, மண்ணின் வளத்தைப் பெருக்கிட பாசன வசதி உள்ள நிலங்களில் தக்கைப் பூண்டு சாகுபடி செய்யலாம். போதுமான ஈரப்பதம் நிலத்தில் இருக்கும்போது, ஏக்கருக்கு 20 கிலோ வீதம் விதைத்து 30 முதல் 45 நாட்களுக்குள் பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்ய வேண்டும்.

கோடை பருவத்தில் விதைக்கப்படும் பசுந்தாள் பயிர் மூலம் நிலத்துக்குத் தேவையான 20 சதவீதம் தழைச்சத்து இயற்கையாகவே அதிகரித்து அடுத்து வரும் பயிருக்கு எளிதில் கிடைக்கும். மேலும், மூடு பயிராக வளர்ந்து மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படும். பசுந்தாள் உரங்கள் பயிரிடுவதால், மண்ணின் கட்டமைப்பை ஏற்படுத்துகிறது. நீர் தேக்கும் திறனை அதிகப்படுத்துகிறது. பசுந்தாள் உரங்கள் பயிரிடுவதால் கார மண்ணை மீட்டெடுக்க உதவுகிறது. மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. மண்ணில் கரிம சத்து அதிகரிக்கிறது. மண்ணில் நுண்ணுயிர்கள் வேகமாகப் பெருகும். எனவே, விவசாயிகள் பசுந்தாள் உரப்பயிர் விதைகளை மானியத்தில் பெற்று விதைத்து, மண் வளத்தைப் பாதுகாத்து, மகசூலை பெருக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

The post பயிரில் மகசூல் அதிகரிக்க பசுந்தாள் உரமிட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Kelamangalam District ,Assistant Director of ,John Lourdes Xavier ,
× RELATED தேன்கனிக்கோட்டை அருகே பிரசவ வலியால்...